தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் என்பது இந்துக்களின் பண்டிகை, எனவே பொங்கல் கொண்டாடுபவர்களுக்கு மட்டுமே அரசு பொங்கல் பரிசு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
மேலும், தமிழக அரசியல் களம் குறித்துப் பேசிய அவர், கிறிஸ்துவ மக்களின் வாக்குகளைக் கவர்வதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்டார். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் விஜய் ஆகிய மூவரும் கிறிஸ்துவ சபைகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
