சென்னை அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி மெரினா கடற்கரை, பிராட்வே ஆகிய இடங்களில் தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனாம்பேட்டையில் இன்று பெண் பணியாளர்களை கைது செய்ய முயன்ற போது அவர்கள் போலீஸ் வாகனத்தின் அடியில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
