போடு ரகிட ரகிட..! PM கிஷான் தொகை ரூ.4000..? விவசாயிகளுக்கு வெளியான புது அப்டேட்…!!

By Soundarya on மார்கழி 29, 2025

Spread the love
மத்திய அரசின் பி.எம் கிசான்  திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், அத்தகைய திட்டம் எதுவும் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும், நிதி உதவியை உயர்த்தும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
தற்போது இத்திட்டத்தின் கீழ் 21 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 2025 பிப்ரவரி மாதத்தில் 22-வது தவணைத் தொகையான 2,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் தவணைத் தொகையைப் பெறுவதற்கு பி.எம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்களின் நிலையைச் சரிபார்த்துக் கொள்ளலாம் மற்றும் இ-கேஒய்சி நடைமுறைகளைப் பூர்த்தி செய்து பயனடையலாம்.