2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா?… டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் விஜயின் அரசியல் வருகை என்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் நிலவி வரும் நிலையில் முக்கிய கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் விஜய் தீவிரம் காட்டி வருகின்றார். சமீபகாலமாகவே டிடிவி தினகரன் விஜய் கூட்டணியில் இணைய போவதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கூட்டணி குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. எங்களை வழி நடத்துவதே எங்களின் தொண்டர்கள் தான். அமமுக எடுக்கின்ற நிலைப்பாடு தான் வெற்றி கூட்டணியை அமைக்கும். இந்த கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கடமை தொண்டர்களுக்கும் எங்களுக்கும் உள்ளது. ஒட்டுமொத்த தொண்டர்களின் நிலைப்பாட்டை எங்களின் நிர்வாகிகள் மூலமாக தெரிந்து கொண்டு இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தரக்கூடிய கூட்டணியை அமைப்போம்.

   

என் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். எனது நிலைப்பாடு என்ன என்பதை மூன்று மாதத்திற்குள் சொல்லி விடுவேன். கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் எங்களுடன் பேசுவது உண்மை. ஆனால் நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.