அடுத்த ட்விஸ்ட்… தவெக கூட்டணியில் இணையும் காங்கிரஸ்… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் களத்தில் உள்ள நிலையில் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகின்றது. கட்சி தொடங்கிய பிறகு முதல் தேர்தலை சந்திக்கும் விஜயின் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். விஜய் அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வாய்ப்புள்ளதாக சமீப காலமாகவே ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜயை முதல்வர் வேட்பாளராக இருப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்று அக்கட்சி நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் காங்கிரஸ் இணைவதாக வெளியான செய்தி குறித்து பேசிய அவர், அது குறித்து எனது கவனத்திற்கு தகவல் வரவில்லை என்றார். மேலும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு வந்ததைப் போல கூட்டம் விஜய்க்கு வருகிறது. மலேசியாவில் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.