தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சனம் செய்துள்ளார். “இன்று தவெக செயல்படும் விதம் மக்கள் நீதி மய்யத்தைப் போலவே உள்ளது; விஜய் அடுத்த கமல்ஹாசன் தான்” என்று அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் கமல்ஹாசனின் அரசியல் பயணத்தைப் போலவே இறுதியாகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகும் என்ற தொனியில் அவர் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தவெக நிர்வாகிகள் இன்று டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள நிலையில், அர்ஜுன் சம்பத்தின் இந்த விமர்சனம் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை வீழ்த்த விஜய் முன்வர வேண்டும் என ஒருபுறம் பாஜக அழைப்பு விடுத்து வரும் நிலையில், அதன் கூட்டணி ஆதரவு அமைப்பான இந்து மக்கள் கட்சியின் தலைவர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
