இனி ரயில் டிக்கெட் புக் செய்வது ரொம்ப கஷ்டம்… ஜனவரி 12 முதல் எல்லாமே மாறப்போகுது… ரயில் பயணிகளுக்கு புதிய ரூல்ஸ்…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

இந்தியாவின் எந்த ஒரு பொது போக்குவரத்தையும் விட மக்கள் அதிகம் நம்பிக்கையோடு பயன்படுத்தக்கூடிய ஒரு போக்குவரத்து ரயில் பயணம் தான். ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு என்பது இரண்டு விதங்களில் நடைபெறுகிறது. ரயில் புறப்படும் அறுபது நாட்களுக்கு முன்னரே பொது டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். அடுத்ததாக தட்கல் டிக்கெட் பதிவு என்பது ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள் தொடங்குகின்றது. இந்த ரயில் டிக்கெட் முன்பதிவில் ஏஜென்ட்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது.

இதனால் பொதுமக்களால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளையும் ஏஜெண்டுகள் புக் செய்து விடுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அதிக விலைக்கு மக்களுக்கு அவற்றை விற்பனை செய்கின்றன. இதனை தடுக்க ரயில்வே நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. முதல் கட்டமாக தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.

   

ஆன்லைன் மூலமாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது அந்த நபர் தன்னுடைய ஆதார் எண்ணை ஐ ஆர் சி டி சி கணக்குகளுடன் இணைத்திருக்க வேண்டும். தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் சமயத்தில் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு வரும் ஓடிபி என்னை உள்ளீடு செய்தால் மட்டுமே தட்கல் டிக்கெட்டையும் முன்பதிவு செய்ய முடியும் என்ற முறை கொண்டுவரப்பட்டது.

   

இந்நிலையில் ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து ஐ ஆர் சி டி சி இணையதளம் அல்லது செயலி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவில் முதல் நாள் முழுவதுமே ஐ ஆர் சி டி சி கனத்துடன் ஆதார் இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பது நடைமுறைக்கு வருகின்றது. அதாவது டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ரயில் கவுண்டர்களில் சென்ற டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் வழக்கம் போலவே சென்று டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏதாவது ஒரு அடையாள அட்டை காண்பித்தால் மட்டும் போதும். ஆனால் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ஐ ஆர் சி டி சி கணக்கில் ஆதார் எண் இணைத்தால் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.