தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று நடிகை திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும் என்று தூத்துக்குடி விஜயின் முன்னாள் மேலாளர் தற்போது திமுகவில் இணைந்துள்ள பி.டி செல்வகுமார் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு ஆட்டுக்குட்டி மற்றும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் முன்னாள் மேலாளரும் தற்போது திமுக நிர்வாகியுமான பிடி செல்வகுமார் வழங்கினார்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனவும் விஜய்யை சுற்றி இருப்பவர்களுக்கு பணமே முக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். கட்சியில் புதிதாக இணைந்தவர்களை முன்னிலைப்படுத்தி பழைய உழைப்பாளர்களை ஓரம் கட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விஜய் மீது தற்போது தமிழக முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றன. அவர்கள் பொங்கலுக்கு பிறகு திமுகவில் இணையும் விழா நடைபெறும். விஜய் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று திரிஷாவிடம் கேட்டால் தான் தெரியும் என்று அவர் பேசி உள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
