தவெகவில் 20 மாவட்ட செயலாளர் அதிருப்தி… திமுகவில் ஐக்கியம்… பரபரப்பை கிளப்பிய முக்கிய புள்ளி…!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக இடையே போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் திமுகவுக்கு பெரிய சவாலாக விஜய் மாறி உள்ளார். அதிலும் குறிப்பாக சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இணைந்த பிறகு நாளுக்கு நாள் தேர்தல் களம் பரபரப்பாகவே உள்ளது. செங்கோட்டையன் கட்சியில் இணைந்த கையோடு மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதனிடையே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் முன்னாள் மேலாளரும் தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனவும் விஜய்யை சுற்றி இருப்பவர்களுக்கு பணமே முக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். கட்சியில் புதிதாக இணைந்தவர்களை முன்னிலைப்படுத்தி பழைய உழைப்பாளர்களை ஓரம் கட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விஜய் மீது தற்போது தமிழக முழுவதும் 20 மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றன. அவர்கள் பொங்கலுக்கு பிறகு திமுகவில் இணையும் விழா நடைபெறும் என்று அவர் பேசி உள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.