“பால் அல்ல, மெதுவாக கொல்லும் விஷம்” பாலில் சலவைத் தூள், யூரியா போன்றவற்றை கலந்து… பகீர் கிளப்பும் அதிர்ச்சி வீடியோ…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

மும்பையின் அந்தேரி மேற்கில் உள்ள கபாஸ்வாடி பகுதியில், பொதுமக்களின் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும் வகையில் பால் கலப்படத்தில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது. அதிக லாபத்திற்காக ஒரு லிட்டர் பாலை இரண்டு லிட்டராக மாற்றும் நோக்கில், அவர்கள் சலவைத் தூள், யூரியா, சோப்புக் கரைசல், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் செயற்கை இரசாயனங்கள் போன்ற மனித உயிருக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்களைப் பாலில் கலந்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த நச்சு கலந்த பாலைக் குடிக்கும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உயிருக்கு இந்த கும்பல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பணத்தாசைக்காகத் திட்டமிட்டு நடத்தப்படும் இந்தக் கொடூரச் செயல், வெறும் குற்றமாக மட்டுமல்லாமல் மனிதநேயமற்றச் செயலாகவும் பார்க்கப்படுகிறது. இத்தகையக் கலப்படக் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அன்றாட உணவில் விஷம் கலப்பதைத் தடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.