தன் கணவனை விளையாட்டாகப் பயமுறுத்த நினைத்த பெண்ணின் குறும்பு, விபரீதமான அதே சமயம் நகைச்சுவையான ஒரு சூழலை இணையத்தில் உருவாக்கியுள்ளது. கணவனைப் பயமுறுத்துவதற்காகத் தான் தீக்குளிக்கப் போவது போல நடித்த அந்தப் பெண், தன் மீது ஒரு கேன் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நாடகமாடியுள்ளார்.
🚨A woman wanted to scare her husband with a prank and poured a can of gasoline on herself, pretending she wanted to set herself on fire; but her husband’s reaction was completely unexpected 😂😂 pic.twitter.com/EaestwYVdJ
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) December 26, 2025
மனைவியின் இந்த நடிப்பைப் பார்த்த கணவன், சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து அவர் மீது தீ வைக்க முயன்றார். இதைக் கண்டு பதறிய அந்தப் பெண், அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த விடியோ இணையவாசிகளிடையே பலத்த சிரிப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.
