கொடூரத்தின் உச்சம்.! இந்தியில் பேசியதால் 6 வயது மகளை கொன்ற தாய்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்போலி பகுதியில், 6 வயது சிறுமி ஒருவரை அவரது தாயே கழுத்தை நெரித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சுப்ரியா பிரமோத் மமுங்கர், தனது மகள் மராத்தி பேசாமல் இந்தியில் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். சம்பவத்தன்று சிறுமி இந்தியில் பேசியதைக் கேட்டு ஆத்திரமடைந்த தாய், கட்டுப்பாட்டை இழந்து சொந்த மகளின் உயிரைப் பறித்துள்ளார்.

இந்தக் கொலைக்கு மொழிப் பிடிவாதம் மட்டுமின்றி, நீண்டகால வெறுப்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மகளின் மீதான இந்த வெறுப்பும், மொழி குறித்த கோபமும் ஒரு பிஞ்சுயிரைப் பறிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. தற்போது அந்தத் தாயைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.