கர்நாடக மாநிலம் பிளகாவி மாவட்டம் சிக்கோடி பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற இளைஞருக்கு மகேஸ்வாடி பகுதியை சேர்ந்த துக்காராம் மற்றும் ஆரிப் ஆகிய இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் ரயில் நிலையங்களில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ரயில் பயணிகளிடமும் அடிக்கடி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். இதனிடையே பிரதீப்பும் மகேஸ்வாடி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் பிரதீப்பின் காதலிக்கும் பிரதீப்பின் நண்பரான துக்காராம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பிரதீப்புக்கு தெரியாமல் நெருங்கி பழகி வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து சுற்றி திரிந்தனர். தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இதனை அறிந்த பிரதீப் தன்னுடைய காதலியையும் நண்பனையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய காதலியின் வீட்டுக்கு பிரதீப் சென்றுள்ளார். அப்போது அவர் துக்கா ராவுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது.
தன்னுடைய காதலியை கூடவே இருந்த நண்பன் துரோகியாக மாறி தன்னிடம் இருந்து அபகரித்துக் கொண்ட ஆத்திரம் தீராத பிரதீப் இதை தனது மற்றொரு நண்பரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து துக்கா ராமை கொலை செய்வது என இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி மது குடிக்க வரும்படி அவரை ரயில் நிலையத்திற்கு வரவழைத்து நண்பர்கள் இருவரும் சேர்ந்து அவரின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கியுள்ளனர்.
பிரதீப் மற்றும் ஆரிப் இருவரும் சேர்ந்து துக்காராமை கடுமையாக அடித்தே கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்த நிலையில் இருவரும் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. தற்போது பிரதீப்பை கைது செய்துள்ள போலீசார் அவருடைய நண்பரை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
