பல பெண்களுடன் தொடர்பு… பிளேபாயாக மாறிய கணவன்… தூங்கும் போது மர்ம உறுப்பை வெட்டி வீசிய மனைவி… கோவையில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிதான் ஹசாரிக்கா (33) என்பவருக்கு திருமணம் ஆகி மனைவி ஜிந்தியுடன் கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அங்கு பிளம்பர் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே பிதான் ஹசாரிகாவுக்கு வடமாநில பெண்கள் பலருடன் நெருக்கமான தொடர்பு இருந்துள்ளது. அவர் அடிக்கடி அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களுடன் அவர் அடிக்கடி வீடியோ கால் மூலம் பேசி வந்துள்ளார். இதனிடையே மனைவி ஒருமுறை கணவரின் செல்போனை வாங்கி பார்த்த போது கணவரின் மன்மத லீலைகள் தொடர்பாக அவருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் தன்னுடைய கணவரை கண்டித்துள்ளார்.

இருந்தாலும் மனைவியின் கண்டிப்பாக மீறி அவர் அடிக்கடி பெண்களுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ஜிந்தி வீட்டிலிருந்தே வெளியே சென்று இருந்த போது பிதான் வீட்டுக்கு இளம்பெண் ஒருவரை அழைத்து வந்து உல்லாசமாக இருந்தார். அந்த நேரத்தில் திடீரென வீட்டுக்கு வந்த மனைவி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கணவன் மீது ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தனது மனைவியை சொந்த ஊரான அசாம் மாநிலத்திற்கு சென்று விடுமாறு பிதான் மிரட்டி உள்ளார். இந்நிலையில் கணவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த மனைவி சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவன் மது போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

   

கணவன் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த மனைவி சமையல் அறையில் இருந்து கத்தியை எடுத்து வந்து அவரின் மர்ம உறுப்பை வெட்டி அறுத்து வீசியுள்ளார். பிறகு கணவரை அதே அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்று விட்டார். கதவு பூட்டப்பட்டதால் வெளியே வர முடியாமல் துடித்த பிதான் கத்தி கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கோவையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.