திடீர் திருப்பம்… விஜய்யுடன் கூட்டணி சேரும் காங்கிரஸ்?… சற்றுமுன் அறிவிப்பை வெளியிட்ட முக்கிய புள்ளி…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் சேர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகின்றார். குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டி வரும் நிலையில் மறுபக்கம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கிறது.

சமீபகாலமாகவே காங்கிரஸ் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் என வதந்திகள் பரவி நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என செல்வ பெருந்தகை மறுப்பு தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் காங்கிரஸ் வளர விரும்பினால் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக நிழலில் இருந்தால் காங்கிரஸ் வளர்ச்சி குன்றிவிடும் எனவும் கூறியுள்ளார்.