“அம்மா என்னால இனி வாழ முடியாது”… பெற்றோரிடம் கதறிய மகள்… அடுத்த நொடியே வந்த போன் கால்… திருமணமான ஒரே மாதத்தில் கணவன் செய்த கொடூரம்…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியை சேர்ந்த லிகித் சிம்ஹா என்பவருக்கும் நாகமங்கலா பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவருக்கும் கடந்த மாதம் இறுதியில் திருமணம் நடந்தது. இதனிடையே ஐஸ்வர்யா தனது கணவருடன் மல்லச்சந்திரா பகுதியில் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஒரு மாத காலங்கள் கூட ஆகாத நிலையில் லிகித் சிம்ஹா, ஐஸ்வர்யாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரிடம் தொடர்ந்து தவறாத செய்து வந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யாவை அடித்து உதைத்து துன்புறுத்தியதால் ஐஸ்வர்யா தனது பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் ஐஸ்வர்யாவின் பெற்றோர் மகள் வீட்டுக்கு வந்து மருமகனிடம் சமரசம் பேசி சண்டையை முடித்து வைத்தனர். பிறகு அவர்கள் மாலையில் வீடு திரும்பிய பிறகு மீண்டும் கணவன் மனைவியிடையே சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லிகித் சிம்ஹா ஐஸ்வர்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

   

இதனால் மணமுடைந்த ஐஸ்வர்யா கணவன் வெளியில் சென்றதும் தன்னுடைய சேலையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறகு வீட்டுக்கு வந்த லிஹித் ஷிம்ஹா மனைவி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே ஐஸ்வர்யாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மகள் வீட்டுக்கு விரைந்து வந்த அவர்கள் ஐஸ்வர்யா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.

   

உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஐஸ்வர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஐஸ்வர்யாவின் பெற்றோர் மருமகன் மீது புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து லிஹித் சிம்ஹாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.