சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய பராசக்தி படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது, கொரோனா காலத்தில் சூர்யாவிடம் சொன்ன கதை தான் இது. வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறனும் நானும் நெருங்கிய நண்பர்கள். அப்போது நிறைய கதைகள் பற்றி பேசினோம். எனக்கு இந்த கதை ரொம்பவும் பிடித்திருந்தது.
எனக்கு சூர்யா தான் நெருங்கிய நண்பர். உடனே அவருக்கு போன் செய்து இந்த ஐடியாவை சொன்னேன். அவரும் ரொம்ப ஆர்வமாகி விட்டார். ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை. முக்கியமாக ஒரு பிரச்சனை இருந்தது. சூர்யாவுக்கு தொடர்ச்சியாக சூட்டிங் இருந்தது. அதனால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த கதையை தொடர்ச்சியாக சூட் செய்யவில்லை என்றால் செலவும் எகிறி விடும்.
இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கதை இருக்கிறதா என தயாரிப்பாளர் அருண் விஸ்வாவும் கேட்டிருந்தார். உடனே சிவாவை சந்தித்து இந்த கதையின் ஐடியாவை சொன்னேன். உடனே அவர் கால்சீட் கொடுக்கிறேன். எங்கே கையெழுத்து போட சொன்னாலும் போடுகிறேன் என்று சொல்லி இந்த படத்துக்குள் வந்துவிட்டார் என்று சுதா கொங்கரா கூறியிருக்கிறார்.
