“பாஜக தீய சக்தி”.. விஜய்க்கு இதை சொல்ல தைரியம் இருக்கா?… முத்தரசன் பகிரங்க சவால்…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் தயாராகி வருகின்றார். விஜய்க்கு பெரும்பாலானோர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தாலும் சில கட்சிகள் விஜயை எதிர்த்து வருகின்றன. அதன்படி தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இடையேயான வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஜாதி மத அரசியலை முன்னெடுக்கும் பாஜக தான் உண்மையான தீய சக்தி என்று முத்தரசன் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை தீய சக்தி என்று சொல்லும் தைரியம் விஜய்க்கு உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி சொல்ல தயங்குவது விஜய் மறைமுகமாக மத அரசியலை ஆதரிக்கிறார் என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. கொள்கை எதுவும் இல்லாமல் வெறும் வெறுப்பு அரசியலை மட்டும் பேசி வருவதால் விஜய்க்கு எந்த பயனும் கிடையாது. விஜயின் அரசியல் நகர்வுகள் தெளிவற்ற இருப்பதாகவும் அவர் யாருக்காக அரசியல் செய்கிறார் என்பதில் இன்னும் குழப்பம் நீடிப்பதாகவும் முத்தரசன் விமர்சித்துள்ளார்.