உலக அளவில் சிறந்த தீர்க்கதரிசியாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பாபா வாங்கா. வரும் 2026ம் ஆண்டில் நடக்கப் போகும் விஷயங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் கணித்து கூறியுள்ளார். அந்த வகையில் பாபா வாங்காவின் கணிப்பின்படி வரும் 2026ம் ஆண்டில் 12 ராசிகளில் பிறந்தவர்கள் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் மட்டும் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்று பாபா வாங்கா கணித்துக் கூறியிருக்கிறார். பாபா வாங்காவின் கணிப்பு படி 2026ம் ஆண்டில் பொன் பொருள் செல்வம் என அனைத்தும் குறைவின்றி வாழப்போகும் 4 ராசிக்காரர்கள் குறித்து இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.
மேஷம்
2026ம் ஆண்டில் மேஷ ராசிக்காரர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியில் முடியும். நிதி ஆதாயங்களையும் உயர்த்தும். அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமையும். வியாபாரத்தில் சிறப்பான ஆண்டாக இருக்கும்.
ரிஷபம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்கு 2026ம் ஆண்டு அதிர்ஷ்டகரமான மற்றும் வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். இதுவரை அனுபவித்த அனைத்து போராட்டங்களும் முடிவுக்கு வரும். கடின உழைப்புக்கான பலன்களை இந்த ஆண்டு முழுவதும் பெறுவார்கள். ஆண்டின் தொடக்கத்திலும் ஏப்ரல் மாதத்துக்கு பிறகும் வங்கி கணக்கில் அபரிமிதமான வளர்ச்சியும் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சங்களையும் தொடுவார்கள்.
மிதுனம்
கிரகங்களின் இளவரசன் புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்களுக்கு 2026ம் ஆண்டு பிரகாசமாக இருக்கப் போகிறது. அவர்களது திட்டமிடலும் செயல்பாடும் அபரிமிதமான நிதி பலன்களை பெற்றுத் தரும். தொழில் வாழ்க்கை சமூகத்தொடர்புகள் விரிவடையும். முதலீடுகள் செய்ய இது சிறந்த ஆண்டு.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி உள்ளது. தலைமை பண்பும் தன்னம்பிக்கையும் இவர்களை வெற்றிக்கு வழிபடுக்கும். பல சாதகமான வாய்ப்புகள் வாழ்க்கையின் திசையை மாற்றி செல்வ செழிப்பாக இந்த 2026ம் ஆண்டில் வாழ வைக்கும்.
