2026 தேமுதிக கூட்டணி… இரவோடு இரவாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஏறத்தாழ பெரும்பாலான கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவித்து விட்டன. ஆனால் பாமக மற்றும் தேமுதிக விடுத்த கட்சிகள் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன. இதனிடையே பிரேமலதா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொடுத்த கட்சிக்கு அழிவு காலம் தொடங்கி விட்டதாகவும் அவர் சாபம் கொடுத்துள்ளார். மேலும் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாகவும் அந்த மாநாட்டின் போது தங்களின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.