“இதுவே கடைசி எச்சரிக்கை” மீறினால்… அன்புமணிக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை…!!

By Soundarya on மார்கழி 26, 2025

Spread the love

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான தலைமைத்துவப் போட்டி 2025-ஆம் ஆண்டில் கட்சிக்குள் ஒரு பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் 2025 செப்டம்பரில், அன்புமணி ராமதாஸைப் பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.

இந்நிலையில் அன்புமணிக்கு கட்சித் தலைவர், கொடி, சின்னம் எனப் பயன்படுத்திக் கொள்ள எந்த உரிமையும் இல்லை என்று சட்டப்படி உறுதி செய்யப்பட்டள்ளது. மீறிப் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமதாஸ் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.