உஷாரா இருங்க மக்களே…! தோஷம் கழிப்பதாக கூறி விபூதி அடித்த நபர்கள்… கண்விழித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!

By Devi Ramu on மார்கழி 26, 2025

Spread the love

சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் வசிக்கும் தீபக்ஜெயின் என்ற இளம்பெண், அங்குள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த இரு மர்ம நபர்கள், அந்தப் பெண்ணுக்குப் பயங்கரமான ‘தோஷம்’ இருப்பதாகக் கூறி நைசாகப் பேச்சு கொடுத்துள்ளனர்.

பின்னர், பரிகாரம் செய்வது போல நடித்து அவர் மீது விபூதி போன்ற மயக்கமூட்டும் பொடியைத் தூவியுள்ளனர். இதனால் நிலைகுலைந்த பெண்ணிடம், அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க வளையல்களைக் கழற்றி கைப்பையில் வைக்குமாறு அந்த நபர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

   

அவர்கள் சொன்னதை நம்பி தீபக்ஜெயின் தனது வளையல்களைக் கழற்றிப் பையில் வைத்த அந்த நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில் திருடர்கள் பையைத் தட்டிப்பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

   

மயக்கம் தெளிந்த பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கைதேர்ந்த கொள்ளையர்களின் இந்த நூதன மோசடி குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.