“உயிரே போயிடும்”… தண்ணீரை சூடாக்கி குளிக்க வித்தியாசமாக யோசித்த நபர்… எச்சரிக்கும் இணையவாசிகள்…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது. வசதி படைத்தவர்கள் கீசர் மற்றும் வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்தினாலும், சாமானிய மக்கள் இன்றும் அடுப்பு அல்லது ஹீட்டிங் ராடுகளை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. இது அதிக நேரத்தையும் உழைப்பையும் கோருகிறது.  இந்த நிலையில், ஒரு இளைஞன் தண்ணீரை எளிதாகச் சூடாக்க ஒரு புதிய  முறையைக் கண்டறிந்துள்ளார். மிகவும் எளிமையான மற்றும் செலவற்ற அவரது இந்த வினோதமான முயற்சி, இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

   

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது பைக்கைப் பயன்படுத்தி வினோதமான முறையில் குளிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. முதலில் தனது பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தும் அவர், அதன் பின் சக்கரத்திற்கு அடியில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை வைக்கிறார். பின்னர், தண்ணீரின் மேல் பெட்ரோலை ஊற்றி தீயை மூட்டுகிறார். இது ஒரு ஆபத்தான செயல்பாடு என்பதால் இதை முயற்சி செய்யக்கூடாது. பெட்ரோல் மிகவும் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது மற்றும் கட்டுப்பாடற்ற தீவிபத்துகள் அல்லது வெடிப்புகளை ஏற்படுத்தலாம். இது போன்ற செயல்கள் கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என இணையவாசிகள் கருது தெரிவித்து வருகிறார்கள்.