பற்கள் சுத்தமாகவும் வெண்மையாகவும் இருந்தால்தான் சிரிக்கும் போது முகத்திற்கே தனி அழகு வரும். ஆனால் பற்களை சரியாக பராமரிக்காததால் அதன் உள்பகுதிகள், வெளிப்புறங்களில் விடாப்பிடியான மஞ்சள் கருப்பு கறைகள் உருவாகி விடும். இதை அகற்ற பல் டாக்டரிடம் சென்றால் சுத்தம் செய்ய பல ஆயிரம் ரூபாய் செலவாகும். அதற்கு மாறாக வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து இந்த கறைகளை எளிதாக நீக்க முடியும்.
பேக்கிங் சோடா, டூத் பேஸ்ட், உப்பு ஆகியவை கொண்டு பற்களின் மேல் படியும் கறையை அகற்றலாம். ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சிறிதளவு டூத் பேஸ்ட் ஒரு சிட்டிகை உப்பு இவற்றை கலந்து பற்களைத் தேய்த்த பிறகு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்தால் கறைகள் தளர்ந்து நீங்கும்.
கொய்யா இலை மென்று துப்புதல் – கொய்யா இலைகளில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் தன்மை பற்களில் இருக்கும் தொற்றுக்களை குறைப்பதோடு கறைகளையும் அகற்றும். தினமும் 2 கொய்யா இலைகளை நன்றாக கழுவி மென்று துப்பவும். தினமும் 2 முறை இதை செய்தால் பற்கள் சுத்தமாகும்.
தேங்காய் எண்ணெய், பேக்கிங் சோடா மிஷ்சர் – தேங்காய் எண்ணெய் வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைத்து ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். காலை பல் துலக்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்யவும். பல் சொத்தை ரத்தக்கசிவு போன்றவை குறையும்.
பற்களில் இருக்கும் கறைகளை நீக்க ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவற்றை கலந்து பல்துலக்கும் பிரஷ் கொண்டு பற்களை மெதுவாக தேய்க்கவும். இதனால் கறைகள் மட்டுமின்றி வாய் துர்நாற்றம் கூட குறைவதை நீங்கள் உணரலாம். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிய வைத்தியங்கள் பற்கள் சுத்தமாகவும் வெள்ளையாகவும் ஜொலிக்க உதவும்.
