தார் சாலையே தியேட்டர்…! நடு ரோட்டில் பிளேடு மற்றும் ஸ்ட்ரா வைத்து அறுவை சிகிச்சை…. வாலிபரின் உயிரை காத்த கேரள மருத்துவர்கள்…!!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

கேரள மாநிலம் கொச்சி அருகே இரண்டு பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் வினு என்ற நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விபத்தில் அவரது நுரையீரலுக்குள் மண் புகுந்ததாலும், ரத்தக்கசிவு ஏற்பட்டதாலும் சுவாசிக்க முடியாமல் துடித்துள்ளார்.

அந்த வழியாக காரில் வந்த கோட்டயம் மற்றும் கொச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மூவர், நேரம் கடத்தினால் உயிர் பிரிந்துவிடும் என்பதை உணர்ந்து உடனடியாக களத்தில் இறங்கினர். போதிய வெளிச்சம் இல்லாததால், அங்கிருந்தவர்களின் செல்போன் டார்ச் வெளிச்சத்திலேயே முதலுதவி சிகிச்சையைத் தொடங்கினர்.

   

மருத்துவமனைக்குச் செல்லும் வரை காத்திருக்காமல், தார் சாலையிலேயே பிளேடு மற்றும் சிறிய குழாயைப் பயன்படுத்தி அவரது கழுத்தில் துளையிட்டு சுவாசிக்க வழி செய்தனர். இந்த துணிச்சலான அவசர கால அறுவை சிகிச்சையால் வினுவின் மூச்சுத் திணறல் சீராகி, அவர் உயிருடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

   

தற்போது அவர் நலமுடன் தேறி வரும் நிலையில், கருவிகள் ஏதுமற்ற இக்கட்டான சூழலிலும் சமயோசிதமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய அந்த மூன்று மருத்துவர்களையும் மக்கள் “நடமாடும் தெய்வங்கள்” எனப் பாராட்டி வருகின்றனர்.