கேரளாவில் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய 19 வயது இளைஞர் சஹத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் வழியாக அந்தப் பெண்ணுடன் சஹத்திற்கு நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. ஆசை வார்த்தைகளைக் கூறி அந்தப் பெண்ணின் அந்தரங்கப் படங்களை வாங்கிய சஹத், பின்நாட்களில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் பிரிய நேரிட்டபோது, அந்தப் படங்களை வைத்து அப்பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கேரள போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து சஹத்தைக் கைது செய்துள்ளனர்.
