மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா ஜாக்பாட்….! ஜனவரி 1 முதல் அடிப்படைச் சம்பளம் உயர்வு…? வெளியான தகவல்…!!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 8-வது ஊதியக் குழு அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போதைய 7-வது ஊதியக் குழுவின் காலம் 2025 டிசம்பர் 31 அன்று நிறைவடைவதால், புதிய குழு தனது பரிந்துரைகளை வழங்க மத்திய அமைச்சரவை ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

இந்த புதிய மாற்றத்தின் மூலம், ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் இப்போதுள்ள 18,000 ரூபாயிலிருந்து 21,600 முதல் 26,000 ரூபாய் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவிற்கு 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

   

புதிய ஊதிய உயர்வு தொடர்பான இறுதி அறிக்கை வர 2027-ம் ஆண்டு வரை ஆகலாம் என்றாலும், இதற்கான பலன்கள் 2026 ஜனவரி 1-ம் தேதி முதலே கணக்கிடப்படும். இதனால் ஊழியர்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகை மொத்தமாக கிடைக்க வாய்ப்புள்ளது.

   

புதிய ஊதியக் குழு அமலுக்கு வரும் வரை, ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு வழக்கம்போல ஆண்டுக்கு இருமுறை தடையின்றி வழங்கப்படும் என்றும் அரசு உறுதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.