யாருக்கு பிறந்தேன்னு ரொம்பவும் அசிங்கப்படுத்திட்டாங்க… என்னோட பிறப்பு சான்றிதழை திருடீட்டாங்க… நடிகையின் மகள் வேதனை!

By Elango on மார்கழி 24, 2025

Spread the love

பாலிவுட்டில் பிரபல நடிகை நீனா குப்தா. இவரது ஒரே மகள் மசாபா குப்தா. ஆடை வடிவமைப்பாளர். முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் மகள்தான் மசாபா. ரிச்சர்ட்ஸ்க்கும் நீனா குப்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு பிறந்த குழந்தைதான் மசாபா. நீனாவுக்கும் ரிச்சர்ட்ஸக்கும் திருமணம் ஆகவில்லை. கழுத்தில் தாலி இன்றி குடும்பத்தார் ஆதரவின்றி மசாபாவை பெற்றெடுக்க கஷ்டப்பட்டதாக நீனா குப்தா நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

இதனால் நீனா குப்தா திருமணமாகாமல் தாயானவர் என்று விமர்சிக்கப்பட்டார். அதே காரணத்திற்காக மசாபா பள்ளியில் சக மாணவ மாணவியர் கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மசாபா, தன்னுடைய பிறப்புச் சான்றிதழ் திருடப்பட்டதாக அழுதபடி கூறியிருக்கிறார்.

   

மசாபா கூறியதாவது, நான் பிறந்த போது என் பிறப்பு சான்றிதழை மருத்துவமனையில் இருந்து திருடி மீடியாவில் லீக் செய்து விட்டார்கள். அது செய்தித்தாளில் முதல் பக்கத்தில் வந்தது. நான் சட்ட விரோதமாக பிறந்த குழந்தை என்பதை நிரூபிக்கவே இப்படி செய்திருக்கிறார்கள். எனக்கு 9 10 வயது இருக்கும்போது தான் அந்த செய்தி பற்றி புரிந்தது. இருந்தாலும் எனக்கு முழுதாக புரியவில்லை.

   

என் பிறப்பு பற்றி பலவிதமாக பேசப்பட்டது. ஆனால் என் பிறப்புச் சான்றை ஏன் திருடி மீடியாவிடம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. என் அம்மா தான் பாவம். அவரை நினைத்தால் பாவமாக உள்ளது. அந்த நேரத்தில் அவர் எப்படி சமாளித்தாரோ? மறைந்த கவிஞரும் ஓவியரும் இயக்குனருமான பிரதிஷ் நந்தி தான் அந்த கொடூரமான செயலை செய்தார். அவர் மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஏன் இப்படி செய்தார் என்று புரியவில்லை என்று மசாபா கூறியிருக்கிறார்.