DMK, ADMK, TVK யாரு ஓட்டுக்கு காசு கொடுத்தாலும் வாங்கிக்கோங்க… ஆனா ஓட்டை மட்டும் BJP-க்கு போட்ருங்க… சர்ச்சையை கிளப்பிய நயினார் நாகேந்திரன்…!!

By Soundarya on மார்கழி 24, 2025

Spread the love

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், எட்டரை கிராமத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை நயினார் நாகேந்திரனிடம் நேரடியாகத் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், “தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பலரும் வாக்குகளுக்காகப் பணத்தையும், பொருட்களையும் கொடுப்பார்கள். அதையெல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், வாக்களிக்கும்போது மட்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு (பாஜக) வாக்களிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.