ரூ.21 லட்சம் வரை சம்பளம்…! இன்போசிஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…. நாளையே கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!

By Devi Ramu on மார்கழி 24, 2025

Spread the love

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், நான்கு வெவ்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் ஸ்பெஷலிஸ்ட் இன்ஜினியர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் புரோகிராமர் உள்ளிட்ட இந்தப் பணிகளுக்குத் தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு 6.25 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 21 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இது தவிர, பணியில் சேரும்போது ஊக்கத்தொகையாக 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சமாகும். 2025-ம் ஆண்டு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை முடித்த பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

   

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவித முன்அனுபவமும் தேவையில்லை என்பதால் புதியவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் டிசம்பர் 25-ம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களுக்குள் இன்போசிஸ் நிறுவன நேர்காணலில் பங்கேற்றவர்கள் விண்ணப்பிக்கத் தடையுள்ளது. பணிக்கான இடங்கள் தேர்வு முடிவிலேயே அறிவிக்கப்படும் என்பதால், தகுதியுள்ள நபர்கள் காலக்கெடு முடிவதற்குள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.