“ஒரு கிளாஸ் தண்ணீர் கூட கொடுக்கல” இது தான் எங்க பொழைப்பு.. பெங்களூரு டெலிவரி ஊழியரின் குமுறல்…!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

பெங்களூருவில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், தான் எதிர்கொள்ளும் அன்றாடக் கசப்பான அனுபவங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் ஆர்டரை டெலிவரி செய்ய அடுக்குமாடி குடியிருப்புக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் (செக்யூரிட்டி) பைக்கை உள்ளே கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நீண்ட தூரம் நடந்து வந்த பிறகும், வாடிக்கையாளர் கீழே வந்து ஆர்டரைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர்.  கடும் வெயிலிலும் அலைச்சலிலும் சோர்வடைந்து தாகத்துடன் சென்றபோது, வாடிக்கையாளர் ஒரு கிளாஸ் தண்ணீர் கூட தர முன்வரவில்லை. மாறாக, அவரிடம் “உன்னால் முடியாவிட்டால், அடுத்த முறை ஆர்டரை எடுக்காதே” என்று அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். பசியைப் போக்கும் பணியில் இருக்கும் இத்தகைய ஊழியர்களிடம் மக்கள் அடிப்படை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.