“கண்களில் வழிந்த கண்ணீர்” வெறிச்சோடிய மைதானத்தில் மௌனமாக இந்தியப் பெருமை… தங்கம் வென்று சாதித்த ஜோதி யாராஜி…!!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

ஆரவாரமற்ற, வெறிச்சோடிய மைதானத்தில் ஒரு இந்திய வீராங்கனை நமது தேசியக் கொடியைத் தோளில் சுமந்து மௌனமாக நடந்து செல்கிறார். அவர் வேறு யாருமல்ல, இந்தியாவின் தடகள நட்சத்திரம் ஜோதி யாராஜி. மே 29, 2025 அன்று நடைபெற்ற 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் (Hurdles) மின்னல் வேகத்தில் ஓடி அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

கடின உழைப்பால் விளைந்த அந்த வெற்றிக் கணத்தில், அவரது கண்களில் வழிந்த கண்ணீர் ஒரு தேசத்தின் பெருமையை பறைசாற்றியது. தனிமையில் அவர் மேற்கொண்ட போராட்டமும், தடைகளைத் தாண்டி அவர் படைத்த இந்த சாதனையும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.