“சாரி அப்பா அம்மா, நான் சாகப் போகிறேன்”… கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை… அதிர்ச்சி காரணம்…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் ஜார்கண்டை சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி பிரின்ஸி குமாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி தனது விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த சனிக்கிழமை இரவு அவருடைய பெற்றோர் பலமுறை போன் செய்தோம் மாணவி பதிலளிக்காததால் விடுதி காப்பாளர் மூலம் மாணவியின் அரை சோதிக்கப்பட்ட போது இந்த விபரம் தெரிய வந்துள்ளது.

முதல் கட்ட விசாரணையில் முதலாம் ஆண்டில் ஐந்து பாடங்களில் இருந்த அரியர் சுமை மற்றும் கல்வி அழுத்தம் காரணமாக அவர் மனமுடைந்திருந்தது தெரிய வந்தது. மாணவியின் அறையில் இருந்த தற்கொலை கடிதத்தில், சாரி மம்மி, சாரி டாடி, உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று உருக்கமாக எழுதியுள்ளார். மேலும் தனது படிப்புக்காக பெற்றோர்கள் செலவழிக்கும் பணம் குறித்தும் அவர் வருத்தமாக எழுதியுள்ளார். தற்போது கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.