“அவர் இல்லாம இருக்க முடியல…” பிஞ்சு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் செய்த காரியம்…. மனதை உலுக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜா உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இவரது மனைவி ரஞ்சிதா(27). இந்த தம்பதியினருக்கு தேவ சேனாதிபதி(4), சிவ சண்முகப்பிரியா(3) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விவசாய தொழிலாளியான ராஜா உடல்நல பாதிப்பால் சரியாக வேலை செய்ய முடியவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜா நேற்று முன்தினம் அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சிதா நேற்று பூச்சி மருந்தை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு அவரும் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.