அடுத்த பரபரப்பு… மீண்டும் களத்தில் இறங்கும் அண்ணாமலை… டெல்லியில் இருந்து வந்த ஆர்டர்… பாஜக தலைமை கொடுத்த டாஸ்க்…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அரசியல் அத்தியாயம் முடிந்து விட்டதாக கருதியவர்களுக்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தேசிய தலைமை அவர் மீது அதீத நம்பிக்கையை வைத்துள்ளது. அண்ணாமலை வெறும் ஓய்வில் இல்லை மாறாக 2026 தேர்தலுக்கான ஒரு பிரச்சார பீரங்கியாக மீண்டும் களம் இறக்கப்படுவார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி பயணங்கள் மூலமாக தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் முக்கிய பொறுப்பு அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக டிடிவி தினகரன் போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்களை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகளில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டாலும் அண்ணாமலை ஒரு நட்சத்திர பேச்சாளராகவும் தேர்தல் வியூக வகுப்பாளராகவும் செயல்படுவது கட்சிக்கு கூடுதல் பலத்தை தரும் என பாஜக தலைமை நம்புகின்றது. ஒரு கட்சியில் பல ஆளுமைகள் இருப்பதும் அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் தங்களுடைய செல்வாக்கை நிலை நாட்டுவதும் கூட்டணிக்கு வலு சேர்க்குமே தவிர அது உட்கட்சி விரிசலை ஏற்படுத்தாது என்பதற்கு அண்ணாமலையின் தற்போதைய நகர்வு ஒரு சான்றாக உள்ளது.

   

அடிமட்ட தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே அண்ணாமலைக்கு இருக்கும் செல்வாக்கை சரியாக பயன்படுத்திக் கொள்ள பாஜக தற்போது திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு ஒரு கடுமையான சவாலை அண்ணாமலை தரப்பு ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கங்கள் தெரிவிக்கின்றன.