“காதலை சொன்ன அடுத்த நொடியே கல்யாணம்” வணிக வளாகத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்… இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ…!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள வணிக வளாகம்  ஒன்றில் நடைபெற்ற சுவாரசியமான காதல் சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது மேற்கத்திய பாணியில் இளைஞர் ஒருவர், வணிக வளாகத்தின் நடுவே தனது காதலி முன் முழங்காலிட்டு மோதிரத்தை நீட்டித் திருமணக் கோரிக்கையை (Proposal) முன்வைத்தார். அந்த இளம்பெண் ஆச்சரியத்துடன் தனது சம்மதத்தைத் தெரிவித்ததோடு, இருவரும் கட்டிப்பிடித்துத் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

காதலை ஏற்றுக்கொண்ட சில நிமிடங்களிலேயே, அந்த இளைஞர் அப்பெண்ணின் நெற்றியில் குங்குமம் (சிந்தூர்) இட்டார். இது இந்து பாரம்பரிய திருமணத்தின் மிக முக்கியச் சடங்காகக் கருதப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அவர் அப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். ஒரு திரையரங்கக் காட்சி போல பொது இடத்திலேயே இந்தத் திருமணம் நடைபெற்றது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சுற்றியிருந்த பொதுமக்கள் இந்தத் தருணத்தைக் கைதட்டி ரசித்ததுடன், தங்கள் அலைபேசிகளில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.