பிக்பாஸ் வீட்டில் ஒரே நாளில் திடீரென வெளியேற்றப்பட்ட 2 போட்டியாளர்கள் – ஷாக் ஆன ரசிகர்கள்!

By Elango on மார்கழி 21, 2025

Spread the love

கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விஜய் டிவியில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இப்போது 10 வாரங்களை நிறைவு செய்து 70 நாட்களுக்கு மேல் சென்று விட்டது. இதுவரை பிரவீன் ராஜ் பிரவீன் காந்தி கலையரசன் வியானா பிரஜின் கெமி துஷார் அப்சரா என போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் முதல் வாரத்திலேயே நந்தினி என்ற போட்டியாளர் அவராகவே பிக்பாஸ் வீட்டை விட்டுச் சென்று விட்டார்.

கடந்த வாரங்களில் ல் பிரஜின் வியானா வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரத்தில் கம்ருதீன் அல்லது பார்வதி வெளியேற்றப்பட வேண்டும் என்று பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பும் கோரிக்கையும் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது எஃப் ஜே மற்றும் ஆதிரை ஆகிய 2 பேரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்வதி கம்ருதீன் வெளியேறுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஷாக் தந்துள்ளது.