அண்ணாமலை வேண்டுமானால் நாயாக இருக்கலாம், நாங்கள் நாய்கள் இல்லை. 6 அறிவு இருக்கும் மனிதர்கள் என்று தமிழக வெற்றி கழகம் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக வெற்றி கரகம் கூட்டணி குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும். அண்ணாமலை வேண்டுமானால் மோடியின் நாயாக இருக்கலாம். ஆனால் நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது. ஆறு அறிவு இருக்கக்கூடிய மனிதர்கள் தான். Political Vijay is more powerful than after Vijay , வேற எந்த கட்சிக்காவது காசு கொடுக்காமல் இவ்வளவு கூட்டம் வருமா? அப்போ மக்கள் ஆதரவு யாருக்கு எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தால் மீடியா வெளிச்சம் கிடைக்கும். ஆனால் விஜய் சொல்வதைப்போல நாங்கள் டீசன்ட் அரசியல் செய்து வருகிறோம். நடிகருக்காக அனைத்தையும் விட்டுவிட்டு வர, அண்ணன் விஜய் இப்போது நடிகர் கிடையாது, முன்னாள் நடிகர். நடிப்பை விட்டு விட்டு மக்கள் சேவை செய்ய வந்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் நடிகர் விஜயை பார்க்க வரவில்லை. அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயை பார்க்கத்தான் வந்தனர். இந்த புரிதலுடன் பேச வேண்டும். மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
