தினமும் 5 முறை நிறம் மாறும் அபூர்வ சிவாலயம்… திருமண வரம் தரும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

By Elango on மார்கழி 21, 2025

Spread the love

நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் எந்த சிவன் கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவபெருமானின் பாதங்களே பக்தர்களின் தலைமீது பதித்து ஆசி வழங்குவதாக ஐதீகம். பாவங்களை போக்கி திருமண வரம் தரும் தலமாக இந்த சிவன் கோவில் விளங்குகிறது.

இது ஒரு அதிசயமான அற்புத கோவில். ஒரு நாளைக்கு 5 முறை அதாவது இரண்டரை மணி நேரத்துக்கு ஒருமுறை தன்னுடைய நிறத்தை சிவலிங்கம் மாற்றிக் கொண்டே இருக்கும். இரண்டு சிவலிங்கங்கள் மும்மூர்த்திகள் ஒரே கருவறையில் காட்சி தருவது, பக்தர்களுக்கு ஜடாரி சேவை வழங்குவது என பல ஆச்சரியங்களை கொண்ட ஒரே சிவன் கோவில் இதுதான்.

   

கும்பகோணத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் நல்லூர் என்ற ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது. நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் என அழைக்கப்படும் இந்த கோவில் கருவறையில் 2 லிங்கங்களுக்கு பின்னால் சுதை சிற்பமாக சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளிப்பதை பக்தர்கள் தரிசிக்க முடியும்.

   

இந்த கோவிலில் உள்ள சுயம்புலிங்கம் பகலில் 5 முறை நிறம் மாறுகிறது. காலை 6 மணி முதல் 8:24 மணி வரை தாமிர நிறம், காலை 8:25 மணி முதல் 10:48 மணி வரை இளஞ்சிவப்பு நிறம், காலை 10:49 மணி முதல் பகல் 1:12 மணி வரை உருக்கிய தங்கம் நிறம், பகல் 1:13 முதல் 3: 36 மணி வரை நவரத்தின பச்சை நிறம், மாலை 3:37 மணி முதல் 6 மணி வரை என்ன நிறம் என்று அறிந்து கொள்ள முடியாத வித்தியாசமான ஒரு நிறத்தில் இந்த சிவலிங்கம் காட்சியளிக்கிறது. மாடக்கோவிலாக அமைந்துள்ள இந்த கோவில் தென் கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.