தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஏறத்தாழ பெரும்பாலான கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவித்து விட்டன. ஆனால் பாமக மற்றும் தேமுதிக விடுத்த கட்சிகள் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன. இதனிடையே பிரேமலதா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. ஆனால் கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜனவரி ஒன்பதாம் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தேமுதிக கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாக பேசப்பட்டது. தற்போது இரு கட்சிகளுமே எம்பி சீட் தர ஒப்புக்கொண்டாலும் அதிக சீட்களை ஒதுக்குவதாக அதிமுக வாக்கு கொடுத்துள்ளதாம்.. இதனால் தேமுதிக அவர்கள் கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
