நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. விக்ரம் பிரபு நடிப்பில் அடுத்து சிறை என்ற படம் வெளியாக உள்ளது. இதுகுறித்து நேர்காணலில் நடிகர் விக்ரம் பிரபு கூறியதாவது, நான் அதிகமாக போலீஸ் கேரக்டரில் தான் நடித்திருக்கிறேன். எனது தோற்றத்தை மனதில் வைத்து அப்படியான கேரக்டரோடுதான் என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள்.
இனி போலீஸ் கேரக்டரில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த போது வந்த கதைதான் சிறை. டாணாகாரன் இயக்குனர் தமிழ் இந்த கதை உங்களை மனதில் வைத்து எழுதவில்லை. ஆனால் டாணாக்காரன் படத்தின் கேரக்டருக்கு உயிர் கொடுத்தது போன்று இந்த படத்தின் கேரக்டருக்கு உயிர் கொடுக்க உங்களால் தான் முடியும் என்று சொன்னதால் ஒப்புக்கொண்டேன்
நான் நடித்துள்ள சிறை படம் எனக்கு 25வது படம். ஆனால் தாத்தாவும் அப்பாவும் தங்களது முதல் 25 படங்களில் சாதித்த அளவுக்கு நான் எதையும் சாதிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த படங்கள் வெற்றியோ தோல்வியோ ஆனால் நல்ல படங்கள் என்பதில் எனக்கு திருப்தி தான் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியிருக்கிறார்.
