இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படம் அரசன், இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். வடசென்னை கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கிஷோர் விஜய் சேதுபதி ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.கோவில்பட்டியில் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்கி இப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிம்பு விஜய் சேதுபதி வெற்றிமாறன் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோகலட்சுமியும் தாவணி பாவாடை அணிந்த கெட்டப்பில் காணப்படுகிறார். இதன்மூலம் அரசன் படத்தில் யோகலட்சுமி நடிப்பது உறுதியாகி உள்ளது. ஒருவேளை இவர்தான் சிம்புவுக்கு இந்த படத்தில் ஜோடியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
