ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடுகள், உடல் பருமன், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பல காரணங்களால் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது. ஓரிரு நாட்கள் தாமதம் அல்லது முன்னதாக மாதவிடாய் வருவது பிரச்சனை இல்லை. ஆனால் 10 முதல் 15 நாட்கள் வித்தியாசம் இருப்பது கவலைக்குரியது. இது பல உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சீரகம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. அகத்தை சீராக்கும் சீரகம்தான் அந்த அற்புதத்தை செய்கிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு சீரக நீர் சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு ஊற வைத்து காலையில் அதனை லேசாக சூடாக்கி குடிக்கலாம். அல்லது சீரகத்தை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு காலையில் கொதிக்கும் நீரில் சேர்த்து சிறிது நேரம் கழித்து குடிக்கலாம்.
சீரகத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி ஒழுங்குபடுத்துகிறது. இது மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வை அளிக்கிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இருந்தும் நிவாரணம் தருகிறது. சீரக நீர் குடிப்பதால் செரிமானம் சிறப்பாக இருக்கும் அஜீரண பிரச்சனை இல்லை என்றாலே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சீரக நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. உடல் உறுப்புகள் நச்சுக்கள் நீங்கி வலுவடைகின்றன. சீரக நீர் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் ஆற்றல் கொண்டது. எனவே உடல் பருமனை குறைக்க உதவுகிறது. எனவே சீரக நீர் குடிப்பது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்துகிறது.
