நான் நடிக்க மாட்டேன்னு சொல்லியும் அந்த காட்சியில் என்னை அசிங்கப்படுத்திட்டாங்க – வருத்தப்பட்ட நடிகர் சரத்குமார்!

By Elango on மார்கழி 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் படங்களில் சரத்குமார் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் ஏய் படத்தில் நடிகை நமீதாவுடன் கவர்ச்சி நடனம் ஆடியது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

கடந்த 2004ம் ஆண்டில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்த ஏய் என்ற படம் வெளியானது. இதில் அர்ஜூனா அர்ஜூனா என்ற பாடல் காட்சியில் சரத்குமாரும் நமீதாவும் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தனர்.

   

இதுகுறித்து நடிகர் சரத்குமார் அந்த நேர்காணலில் கூறியதாவது, ஏய் படத்தில் வருகிற அர்ஜூனா அர்ஜூனா பாடல் ஷூட்டிங்கின் போது, சுந்தரம் மாஸ்டரிடம், இது ரொம்ப அசிங்கமா இருக்கு. நான் பண்ண மாட்டேன் என்று சொன்னேன். அதை செஞ்சுதான் ஆகணும்ன்னு மாஸ்டர் சொல்லிட்டார். இப்பவும் இந்த பாட்டைப் பார்த்தால் வீட்டில் என்னை வைச்சு செய்வாங்க. என்ன டாடி உங்களுக்கு அசிங்கமாி இல்லையா? நீங்க சொல்ல மாட்டீங்களான்னு கேட்டாங்க என்று நடிகர் சரத்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.