ஜோதிட சாஸ்திரத்தின்படி குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் யாருடைய தயவும் இன்றி சொந்தக் காலில் நின்று வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். அவர்களின் தனிப்பட்ட ஆளுமை திறமைகள் அவர்களை ராணி போல வாழ வைக்கும். குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வாழ்க்கையில் முன்னேறி பெரிய வெற்றியாளர்களாக வலம் வருவார்கள். அந்த நட்சத்திரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நிலையான சிந்தனை கொண்டவர்கள். கடினமாக உழைத்து முன்னேற விரும்புபவர்கள். வாழ்க்கையில் எதை செய்தால் முன்னேற முடியும் என்கிற தெளிவு அவர்களிடம் இருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் நிதி வணிகம் மேலாண்மை போன்ற துறையில் சிறந்து விளங்குவார்கள்.
மகம்
மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் தைரியமாக முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டவர்கள். அதிகாரம் நிர்வாகம் மற்றும் அரசியல் போன்ற துறைகளில் நல்ல அங்கீகாரத்தை பெறுகிறார்கள்.
சுவாதி
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். அவர்கள் மற்றவர்களின் கட்டளைகளை பின்பற்றி நடக்க விரும்புவதில்லை. ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துவது அல்லது படைப்பு தொழில்களை தேர்ந்தெடுத்து அதில் பெரும் வெற்றியை ஈட்டுவார்கள்.
மூலம்
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் குரு பகவானின் ஆசியை முழுமையாக பெற்றவர்கள். இவர்கள் சிறு வயதில் இருந்தே பல சிரமங்களை எதிர்கொண்டு வலிமையாக வளர்கிறார்கள். மற்றவர்களின் உதவி இல்லாமல் தனது சொந்த காலில் நின்று சாதித்து காட்ட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை கொண்டவர்கள். எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றியாளர்களாக மாறுவார்கள்.
திருவோணம்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் அதிகமாக இருக்கும். யாரையும் சார்ந்து இல்லாமல் தங்கள் சொந்த புத்திசாலித்தனத்தால் வளர்கிறார்கள். ஊடகம் கல்வி பயிற்சி ஆலோசனை போன்ற துறைகளை தேர்ந்தெடுத்தால் அதில் உயர்ந்த நிலைக்கு செல்வார்கள். இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் சாதனை பெண்களாக வாழ்க்கையில் ஜொலிப்பார்கள் என்று ஜோதிட கணிப்புகள் கூறுகிறது.
