பெண்களே, உங்களுக்கு PCOS பிரச்சனை இருக்கா?… அப்போ தவறியும் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீங்க…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு PCOS பிரச்சனை ஏற்படுகிறது. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். இது கருப்பைகளில் அதிக அளவு ஆண் ஹார்மோன்கள் உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படுகின்றது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய், முகப்பரு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் மாவட்டத் தன்மை போன்ற ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் நீரிழிவு நோய் ஆகியவை இதய நோய் ஆபத்துக்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம், நீர்க்கட்டி உருவாகுதல், மன அழுத்தம், பதட்டம், முடி உதிர்வு, தேவையற்ற முடி வளர்ச்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்படியான நிலையில் PCOS பாதிப்பு உள்ள பெண்கள் சாப்பிட கூடாத உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

   

வைட் பிரட், பாஸ்தா, அரிசி, பேக்கேஜ்டு சீரில்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இனிப்புகள், பேஸ்ட்ரிக்கல், சோடாக்கள், பால், சீஸ், தயிர், கோதுமை, பார்லி, கம்பு அதிகப்படியான சர்க்கரை இன்சுலின் அளவை சீர்குலைந்து PCOS அறிகுறிகளை மோசமாகும். மேலும் பிரெஞ்சு ப்ரைஸ், சிப்ஸ், வறுத்த கோழி, பன்றி இறைச்சி, ஹாட் டாக் ஆகியவற்றை சாப்பிடுவதால் ஹார்மோன் ஏறத்தாழ்வு காரணமாக இந்த நோயின் அறிகுறிகள் மோசமாகும் என்பதால் இதனை சாப்பிடுவதை தடுக்க வேண்டும்.

   

PCOS பிரச்சனைக்கு நிரந்தர சிகிச்சை இல்லை என்றாலும் பல்வேறு சிகிச்சைகள் உள்ளது. முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இன்சுலின் எதிர்ப்பை கட்டுப்படுத்தும். PCOS பிரச்சனை கொண்ட பெண்கள் தங்கள் உடல்நலத்தை முறையாக கண்காணித்து சிக்கல்களை முன்பே கண்டறிந்து சரியான சிகிச்சை பெறுவது அவசியமாகும்.