ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக சனி பகவான் அறியப்படும் நிலையில் அவர் தனது சக்தியை சுமார் 76 நாட்கள் இழந்து இருக்கிறார். அதனால் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டும் பலன் பெறுவார்கள். ஜோதிடத்தில் சனிபகவான் நீதியின் அரசனாகவும் மனிதர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் முக்கிய கிரகமாகவும் உள்ளார். ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் உயர்வு, தாழ்வு, துன்பம், பொறுமை மற்றும் வெற்றியின் பின்னணியில் சனி பங்கு என்பது மிக முக்கியமானதாக உள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் சனி பகவான் மிகவும் பலவீன நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் வலு விழுந்த நிலையில் உள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த காலகட்டம் சுமார் 76 நாட்கள் ஆகும். அதாவது பிப்ரவரி 2026 வரை நீடிக்கும் இந்த காலகட்டத்தில் சனியின் கொடிய தாக்கம் குறைவதால் சில ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக அனுபவித்து வந்த கஷ்டங்களிலிருந்து விடுபெற்ற நிம்மதி பெற வாய்ப்புள்ளது.
துலாம்:
துலாம் ராசிக்கு ஆறாவது வீட்டில் சனிபகவான் பெயர்ச்சிக்கிறார். ஆறாவது வீடு சக்தி வாய்ந்த இடமாக உள்ளது. இதனால் மாணவர்களுக்கு இருந்து வந்த கல்வி தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கிய மேம்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வந்து சேரும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். நிதிநிலைமை மேம்படும். சொத்து அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
கும்பம்:
கும்ப ராசியின் இரண்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். இரண்டாவது வீடு தனஸ்தானம் ஆகும். சனியின் பலம் குறைவாக இருப்பதால் கும்ப ராசிக்காரர்களின் குடும்பத்திலிருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக இருந்த உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் பிரச்சனைகள் தீர்ந்து அமைதியும் செழிப்பும் அதிகரிக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். பழைய பாக்கிகள் வசூல் செய்யப்படும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் முதல் வீட்டில் உள்ளார். அவர் பலவீனமான நிலையை அடைந்திருப்பதால் மீன ராசிக்காரர்கள் இருவரை அனுபவித்து வந்த மன அழுத்தம் நீங்கும். தடைப்பட்டு நின்ற வேலைகள் விரைவில் முடிவடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் லாபத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள். வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
