எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்குவது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி நடந்த நிலையில் புகார் தாரர் ஒரு வருட காலம் சட்டப் போராட்டத்திற்கு பிறகு தான் அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. கர்ப்பமாக இருந்த சைமோல் என்ற பெண் பொதுமக்களை தாக்கும் காவல்துறையினரை படம் பிடித்ததற்காக அவருடைய கணவர் கைது செய்யப்பட்ட பிறகு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அவருடைய குறையை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக பெண் அதிகாரிகள் உட்பட மற்ற பணியாளர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது போலீஸ் அதிகாரி காவல் நிலையத்திற்குள் கர்ப்பிணியாக இருக்கும் அந்த பெண்ணை தாக்கினார். அப்போது மற்ற அதிகாரிகள் குறுக்கிட்டு அந்த போலீஸ் அதிகாரியை கட்டுப்படுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து காவல் நிலையத்தை தாக்கியதாக பொய்யான வழக்குகளை பதிவு செய்து சம்பவத்தை மறைக்க காவல்துறையினர் முயற்சித்ததாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
பதட்டமான சூழ்நிலையை தணிப்பதற்காக முயற்சிப்பதாக கூறி காவல்துறையினர் ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும் அந்த பெண்ணும் அவருடைய கணவரும் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளை வெளியிடுமாறு நீதிமன்றத்தை அணுகிய நிலையில் தற்போது அது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி தெரிவித்துள்ளார்.
Another shocking instance of #PoliceBrutality in Kerala. Pregnant woman, carrying her infant, was assaulted at Ernakulam North Police Station. CCTV footage emerged only after a year-long legal battle. Is this the much-touted promise of women’s safety?@pinarayivijayan pic.twitter.com/bjplsOKojS
— V D Satheesan (@vdsatheesan) December 18, 2025
