பெற்றோர்களே உஷார்… அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்… தமிழகத்தை மிரட்டும் கடத்தல் ராணிகள்… போலீசார் எச்சரிக்கை…!

By Nanthini on மார்கழி 19, 2025

Spread the love

தமிழகத்தில் சமீப காலமாகவே குழந்தை கடத்தல் சம்பவங்கள் என்பது அதிகரித்துவிட்டது. இது மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படுவதாக போலீசார் எச்சரிக்கின்றனர். பெரும்பாலும் வெளிமாநிலங்களை மையப்படுத்தி இந்த கும்பல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கடத்தப்படும் குழந்தைகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. 5 லட்சம் ரூபாய் வரை ஒரு குழந்தை விற்பனை செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் சேலத்தை சேர்ந்த ரமேஷ்(35) என்பவருடைய இரண்டாவது மனைவி நித்யா (30) ஆகியோர் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் நரிக்குறவர் தம்பதியின் குழந்தையை கடத்திச் சென்று விற்பனை செய்துள்ளனர். அதனைப் போலவே சேலத்தை சேர்ந்த ஜானகி என்ற 40 வயது பெண்ணும் அவருடைய தங்கை செல்வி என்பவரும் கைதாகி உள்ளன. அவர்கள் வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையும், எட்டு மாதமான பெண் குழந்தையும் மீட்கப்பட்டது. இவர்களோடு சேர்த்து பிரவீன் என்ற ஆம்புலன்ஸ் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

   

இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவிகளாக சென்னையை சேர்ந்த ஷபானா அவருடைய சகோதரி ரேஷ்மா மற்றும் கொடைக்கானலை சேர்ந்த உமா, மகேஸ்வரி ஆகியோர் செயல்பட்டு உள்ளனர். இவர்களை கடத்தல் ராணிகள் என்று போலீசார் அழைக்கிறார்கள். தற்போது தலைமுறைவாக உள்ள இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தைகளை கடத்தி வரும் ஏஜெண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கமிஷன் தரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.