சமூக வலைதளங்களில் பகிரப்படும் தனது புகைப்படங்கள், ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் தவறாகச் சித்தரிக்கப்படுவது குறித்து நடிகை நிவேதா தாமஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அனுமதியின்றி உருவாக்கப்படும் இத்தகைய போலிப் படங்கள் சட்டவிரோதமானவை. இது ஒரு தனிநபரின் தனியுரிமையில் தலையிடும் மிக மோசமான செயலாகும்” என்று சாடியுள்ளார்.
மேலும், தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் இத்தகைய ஆபாசமான அல்லது போலியான புகைப்படங்களை யாரும் சமூக வலைதளங்களில் பகிரவோ, அதற்கு ஆதரவு அளிக்கவோ வேண்டாம் என அவர் தனது ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
